Muthamizh Mandram


முத்தமிழ் மன்றம் மாணவர்களின் தமிழ் பேசும் திறனை வளர்க்கவும், மேம்படுத்தவும் தமிழ் ஆர்வம் கொண்டவர்களின் ஒன்றுகூடல் ஆகும். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், தமிழ் இலக்கிய ரசனையை வளர்க்கவும் ஊக்குவிக்கிறது. தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும், பல்வேறு நபர்களுக்கிடையேயான செயல்பாடுகள் மற்றும் போட்டிகளை எதிர்கொள்ளும் திறமைகளை வளர்ப்பதற்கும் பல்வேறு வகையான செயல்பாடுகளை இம்மன்றம் நடத்துகிறது. மாணவர்களின் தமிழ் மொழியின் திறனை மேம்படுத்தும் வகையில் ஆய்வு, விவாதம், கட்டுரை எழுதுதல், படைப்பு எழுதுதல், கவிதை எழுதுதல், குறும்படங்கள், வினாடி வினா, சொற்பொழிவு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழின் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரமும் மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களை மாணவர்களிடையே புதுப்பிக்கவும் ஊக்குவிக்கவும் தமிழ் மன்றம் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.
“தமிழ் இனி மெல்லச் சாகும்”, என்ற நிலை மாறி, “தமிழ் இனி வெல்லப் போகும்”, என்ற நிலையை உருவாக்குவதற்கான ஒரு சிறு முயற்சி தான், இந்த “முத்தமிழ் மன்றம்”. தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன் தாய்மொழியின் வேரறிய, நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களைத் தேடிச் செல்லும் ஓர் அற்புதப் பயணம். தமிழின் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரமும் மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களை மாணவர்களிடையே புதுப்பிக்கவும் ஊக்குவிக்கவும் தமிழ் மன்றம் வாய்ப்பை ஏற்படுத்தித்தருகிறது.
“தமிழனாய் இருப்போம்!
தமிழ்ப்பற்றை வளர்ப்போம்!”
மன்றத்தின் நோக்கம்:
உலகளாவிய வளர்ச்சியில் சிக்குண்டு மறைந்து வரும் தமிழின் பெருமையையும், தமிழனின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தையும் நமது கல்லூரி மாணவர்களுக்கும் ஏனைய பிறர்க்கும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி எடுத்து கூறுவதே இம்மன்றத்தின் நோக்கம்.
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, பொள்ளாச்சி முத்தமிழ் மன்றம் நமது கல்லூரி வளாகத்தில் முதன் முறையாக தொடங்கிய சங்கம் நமது முத்தமிழ் மன்றம். மன்றத்தின் தலையாகிய நோக்கம் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அன்னை தமிழ் வழியே அதற்கு ஊன்றுகோலாக நின்று அவர்களது திறமைகளை மென்மேலும் ஊக்குவித்தலே ஆகும்.
மாணவர்களின் ஆற்றலை போட்டிகள் மூலமாக அறிய முடியும். ஆதலால் நமது மன்றத்தின் மூலம் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியும் நடை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழின் ஈர்ப்பை இக்கால மாணவர்களிடம் அறிந்துகொள்ள பல்வேறு பழமொழிப் போட்டிகள் வெவ்வேறு கோணங்களில் நடத்தப்பட்டது மேலும் அறிவியல் சார்ந்த கேள்விகளும் பலவிதமான போட்டிகளாக நடத்தப்பட்டன.
மாணவர்களின் ஆற்றலை மென்மேலும் ஊக்குவிக்க பல்வேறு பரிசுகள் போட்டியாளர்களின் திறமைக்கேற்ப வழங்கப்படும். இக்கால சமூகத்தில் இருதரப்பு வாதங்களும் இருதரப்பில் நியாயங்களாகவே அமைந்துள்ளது, அதனை முன்னிட்டு, நமதுமுத்தமிழ் மன்றம் பல விவாத மேடைகள் மூலம் மாணவர்களுக்கு தலையாய கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளோம். இத்தக விவாத மேடைகள் மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை உணரவும், அவர்களுக்கான சரியான பாதையினை அவர்களது விவாதத்தின் மூலமே அறியவும் உதவுகிறது.
ஒரு புத்தகத்தை வாசிப்பதன்மூலம் உணரக்கூடிய கருத்துக்களை ஒரு சிறு நாடகம் நொடிப்பொழுதில் உணர்த்தி விடும்.இவ்வாறு நாடகங்கள் நடத்துவதன் மூலம் மாணவர்கள் தங்களது நடிப்பு திறமைகளையும், பேச்சு திறமைகளையும் ஒருங்கிணைந்து வளர்த்துக் கொள்ளமுடியும். அனைத்து வித சமுகத்தைச்சார்ந்த மாணவர்களும் இச்சங்கத்தின் மூலம் ஓரினைந்து, இச்சமுதாயத்தினை பல விதமான நட்கருத்துக்கள் மூலம் எதிர்க்கொள்ள, தம்மைத்தாமே ஆசிரியர்களின் வழிகாட்டல் மூலம் உருவாக்கிக்க கொள்ள ஒரு சிறந்த மன்றம் நமதுமுத்தமிழ் மன்றம்.
Glimpses of Activities
முத்தமிழ் மன்றம் - தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி
ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள்:
-> திருமதி. கா துர்காலட்சுமி, உதவிப் பேராசிரியை, மின்னியல் துறை
-> திருமதி. டி சத்திய பிரியா, உதவிப் பேராசிரியை, மின்னணுவியல் துறை